ஏகத்துவம்''வேதத்திலிருந்து அறிவை தன்னிடம் கொண்டிருந்தவரான ஒருவர், கண் இமைப்பதற்குள் அதனை நான் உம்மிடம் கொண்டு வந்து விடுவேன் என்று கூறினார். அது தன் முன் நிலைபெற்றிருப்பதை அவர் (சுலைமான்) கண்ட போது, இது எனது இரட்சகனின் பேரருளில் உள்ளதாகும் எனக் கூறினார்.|| (27:40(

எனவே, குணப்படுத்த முடியாத நோய்களைக் குணப்படுத்தியதும் மரணித்தவர்களை உயிர்ப்பித்ததும் ஈஸா நபியவர்களுடன் தொடர்புபடுத்திக் கூறப்பட்டாலும் உண்மை யில் அவை அல்லாஹ்வின் உத்தரவின் பிரகாரமே நிகழ்ந் தவையாகும். மேற்போந்தவற்றின் மீதான நம்பிக்கை ஏகத்து வத்தின் அடிப்படை களுக்கு முரணானது அல்ல என்பது எமது நம்பிக்கையாகும்.

மலக்குகள்

மலக்குகள் பற்றியும், அவர்களது பிரத்தியேகக் கடமைகள் பற்றியுமான விசுவாசம், மார்க்க நம்பிக்கையில் முக்கியமான ஒன்றாகும். மலக்குகளில் சிலர், நபிமார்களுக்கு வஹி அறிவிப்பாளர்களாக இருந்தார்கள்.(1:97) மற்றும் சிலர், மனிதர்களின் செயல்களைப் பாதுகாக்கும் பொறுப்பையும் (82:10) மேலும் சிலர், உயிர்களைக் கைப்பற்றும் பொறுப்பையும் (7:37) வேறு சிலர், வரம்பு மீறுவோருக்கு தண்டனை கொடுக்கும் பொறுப்பையும் (11:77) கொண்டிருந்த அதேவேளை, இன்னும்  சிலர், முஃமின்களுக்கு நன்மையான வைகளில் நிலைத்திருப்பதற்கு உதவி செய்வோர்களாகவும் (41:30), யுத்தத்தில் முஃமின்களுக்கு ஒத்தாசை புரிவோர்க ளாகவும் (33:9) இருக்கின்றனர். இவை தவிர பிரபஞ்ச அமைப்பில் வேறு பல பொறுப்புகளையும் மலக்குகள் கொண்டுள்ளனர்.

இத்தனை பொறுப்புகளும் பணிகளும் அல்லாஹ்வின் கட்டளையின் பிரகாரமே அமைந்துள்ளமையினால் அஃப்ஆல் மற்றும் ருபூபிய்யத் ஆகிய தவ்ஹீதின் அடிப்படைகளோடு இவை எவ்விதத்திலும் முரண்படுவதில்லை. அத்தோடு, அல்லாஹ்வின் அனுமதியின் பிரகாரம் நபிமார்கள், மஃசூம்கள், மலக்குகள் ஆகியோர் செய்யும் ஷபாஅத்தும் தவ்ஹீதுடன் எவ்விதத்திலும் முரண்பட்டதல்ல என்பது இவ்விடத்தில் நன்கு தெளிவாகின்றது.

அல்லாஹ்வின் அனுமதியின் பிரகாரமன்றி ஷபாஅத்துச் செய்வோர் எவருமில்லை.|| (10:03(

இபாதத் இறைவனுக்கு மட்டுமே

எமது நம்பிக்கையின் பிரகாரம் வணங்கி வழிபடத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. இது பற்றி இபாதத் விடயத்திலான ஏகத்துவம் பற்றிய விளக்கத்தில் குறிப்பிட்டோம். ஆக, அல்லாஹ் அல்லாத எதையும் எவரையும் வணங்கி வழிபடுவது ஷிர்க் ஆகும்.

நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவனில்லை.|(07:59,65,73,85) எனும் வசனம், நபிமார்கள் பலர் கூறியதாக அல்குர்ஆனின் பல இடங்களில் பிரஸ்தாபிக்கப் பட்டுள்ளது. முஸ்லிம்கள் தினந்தோறும் தமது தொழுகையில் சூரா பாத்திஹாவை ஓதுகின்றனர். அதில்,

உன்னையே வணங்குகின்றோம், உன்னிடமே உதவியும் தேடுகின்றோம்.|| என்ற இஸ்லாத்தின் முக்கிய மூல மந்திரத்தை பல தடவை தமது நாவினால் எடுத்துரைத்து, அதன் மீதான தமது நம்பிக்கையை பலப்படுத்திக் கொள்கின்றனர்.

எனவே, அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும், அல்லாஹ்வின் அனுமதியுடன் நபிமார்கள், மலக்குகள் செய்யும் ஷபாஅத்தைப் பற்றிய நம்பிக்கை, வணங்குதல் எனும் பொருளைத் தருவதில்லை என்பது தெளிவாகிறது.

மேலும், குறித்த ஒரு தேவைக்காக நபிமார்களின் மூலமாக வஸீலா தேடுவதும் வணக்கமென்று கணிக்கப்பட முடியாது. இது, செயல்கள் மற்றும் வணக்கம் பற்றிய தவ்ஹீதுடன் எவ்விதத்திலும் முரண்பட்டதன்று என்பது எமது நம்பிக்கையாகும்.

 back 1 2 3 4 5 6 7