ஏகத்துவம்நமது நம்பிக்கையின் படி, தவ்ஹீத் என்பது, இந்நான்கு கிளைகளுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. பின்வருவனவும் அதில் அடங்குகின்றன.

5.தவ்ஹீத் மாலிகிய்யத்

அதாவது எல்லா சிருஷ்டிகளும் அல்லாஹ் வுக்குச் சொந்தமானவை என்று நம்புவது.

''வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியவையாகும்.(02:284(

6.தவ்ஹீத் ஹாகிமிய்யத்

அதாவது சட்டவாக்க அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும் உரியதாகும் என்பது.

''மேலும், எவர் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்க வில்லையோ, அத்தகை யோர் தாம் காபிர்கள்.' (05: 44(

அற்புதங்கள்

நபிமார்கள் செய்யும் வழமைக்கு மாறான பிரமாண்டமான செயல்களனைத்தும் அல்லாஹ்வின் அனுமதியின் பிரகாரமே இடம்பெறுகின்றன என்பதை செயல் கள் (அஃப்ஆல்) பற்றிய ஏகத்துவம் உறுதிப்படுத்துகின்றது. அல்குர்ஆன் நபி ஈஸா அலைஹிஸ் ஸலாம் பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றது:

            எனது உத்தரவைக் கொண்டு வெண்குஷ்டம் மற்றும் கருங்குஷ்டத்தைச் சுகப்படுத்தியதையும் மரணித்தோரை எழுப்பியதையும் நினைவு கூர்வீராக.||       (05:110(

மேலும் நபி சுலைமான் (அலை) அவர்களுடைய அமைச்சர்களில் ஒருவரைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.back 1 2 3 4 5 6 7 next