ஏகத்துவம்அதன்படி அவர்களது இரட்சகன் அம்மலை மீது வெளிப்பட்ட போது, அது அம்மலையை தூள்தூளாக்கி விட்டது. மூஸாவும் திடுக்கிட்டு மூர்ச்சையாகி விழுந்து விட்டார். பின்னர், அவர் தெளிவுபெற்று எழுந்த போது, அல்லாஹ்விடம் 'நீ மிகப் பரிசுத்தமானவன். நான் உன்னிடம் பாவ மன்னிப்புக் கோருகின்றேன். இன்னும் நான் முஃமின்களில் முதன்மையானவன்|என்றும் கூறினார். (07:143-9)

அல்குர்ஆன் பிரஸ்தாபிக்கின்ற இவ்வரலாற்று நிகழ்வு, மனிதர்கள் அல்லாஹ்வைக் காண்பதென்பது சாத்தியமற்றது என்பதற்கு சிறந்த சான்றாகும். சில அல்குர்ஆன் வசனங்களிலும், ஹதீஸ்களிலும் அல்லாஹ்வைக் காண முடியும் என்ற கருத்தை தொனிக்கும் கூற்றுகள் காணப்படினும், அவை அகக் கண்களால் அல்லாஹ்வை அடைய முடியும் என்பதையே சுட்டுவதாக அமைந்துள்ளன என்பது தெளிவு. ஏனெனில், குர்ஆன் வசனங்கள் எப்போதும் ஒன்றையொன்று முரண்பட்டு நிற்பதில்லை. மாறாக ஒன்றை மற்றொன்று விளக்குவதாகவே அமைகின்றது

ஹஸ்ரத் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பார்த்து ஒரு மனிதர், ''அமீருல் முஃமினீனே! எப்போதாவது தங்களது இறைவனைக் கண்டதுண்டா?|| என வினவியபோது, ''காணாத ஒருவனை வணங்குவேனா?||எனக் கூறிவிட்டுச் சொன்னார்கள்: ''ஒருபோதும் கண்கள் அவனை வெளியோட்டமாக காணமாட்டாது. ஆனால், உள்ளங்கள், ஈமானின் யதார்த்தத் தன்மையால் அவனைக் கண்டுகொள்கின்றன.||    (நஹ்ஜுல் பலாகா - குத்பா 179)

மனிதர்களின் பண்புகளை அல்லாஹ்வில் கற்பனை செய்வதும் இடம், காலம், திசை, உருவம் போன்றவற்றை அல்லாஹ்வுடைய இயல்புகளென நம்புவதும் அல்லாஹ்வை அறிவதிலிருந்து தூரமாவதற்கும் ஷிர்க்கினால் அழுக்காவதற்கும் காரணமாக அமைந்து விடுகின்றன. எனவே, அல்லாஹ் மனிதர்களுடைய பண்புகளை விட உயர்ந்தவனும் பரிசுத்தமானவனும் மட்டுமன்றி தன் சகல விடயங்களிலும் ஒப்புவமை யற்றவனாகவும் இருக்கி ன்றான்.

தவ்ஹீத்: இஸ்லாத்தின் ஜீவநாடி

தவ்ஹீத் எனும் ஏகத்துவம் பற்றிய அறிவு, அல்லாஹ்வை அறிந்து கொள்ளும் விடயத்தில் மிக முக்கிய மான அம்சமாகும். தவ்ஹீத், மார்க்கத்தின் அடிப்படைகளில் ஒன்று எனக் கருதுவதை விட அதுவே அனைத்து மார்க்கக் கோட்பாடுகளினதும் மூல உயிராக இருக்கின்றது என்றால் மிகையாகாது.

இஸ்லாமிய அடிப்படைகளும் அதனையொட்டிய பிரிவுகளும் தவ்ஹீதிலிருந்து தான் தோற்றம் பெறுகின்றன. அல்லாஹ் ஒருவன், நபிமார்களின் அழைப்பு (தஃவா) ஒன்று, இறைமார்க்கம் ஒன்று, கிப்லா ஒன்று, இறைவேதம் ஒன்று, அனைத்து மனிதர்களுக்கும் அல்லாஹ்வின் சட்டதிட்டங்கள் ஒன்று, முஸ்லிம்களின் அணி ஒன்று, இறுதியில் மீளும்; மறுமை நாளும் ஒன்றே என இந்த ஒருமை எங்கும் விரவிக் காணப்படுகின்றது.

இதனாலேயே, ஏகத்துவத்திலிருந்து ஷிர்க்கை நோக்கிச் செல்வதை மன்னிக்க முடியாத பாவமென இஸ்லாம் கருதுகின்றது.

''நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர மற்ற எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ, அவர் திட்டமாக மகத்தான பாவத்தை பொய்யாக கற்பனை செய்து விட்டார்.|| (04:48)

''நீர் இணை வைத்தால், நிச்சயமாக உமது செயல்கள் யாவும் அழிந்து விடும். நிச்சயமாக, நீர் நஷ்ட வாளிகளில் ஆகிவிடுவீரென உமக்கும், உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் வஹீ மூலம் அறிவிக்கப ;பட்டது.|| (39: 65)

ஏகத்துவத்தின் வகைகள்

எமது நம்பிக்கைகளின் பிரகாரம், ஏகத்துவம், பல கிளைகளைக் கொண்டதாகும். அவற்றில் பின்வருவன  முக்கியமானவையாகும்.back 1 2 3 4 5 6 7 next