ஏகத்துவம்வாஸ்தவத்தில் இறைவன் நமக்கு நம்மை விடவும் மிக நெருக்கமாக இருக்கின்றான். அனைத்து இடங்களிலும் அவன் வியயாபித்து இருக்கின்றான். ஆனால், எந்நிலையிலும் அவனுக்கென்று பிரத்தியேக இடமொன்று கிடையாது.

''மேலும், நாம் உயிர் நரம்பை விட அவனுக்கு மிக சமீபமாக இருக்கின்றோம்.|| (50:16)

''முதலாமவனும் கடைசியானவனும் அவனே. அந்தரங்க மானவனும், வெளிப்படையானவனும் அவனே. மேலும் அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவன்.||    (57:03)

குர்ஆனின் சில வசனங்களில், அவன் அர்ஷுடையவன், பெரும் கீர்த்தியுடையவன்.||''ரஹ்மான் அர்ஷின்'' மீது நிலைகொண்டான்||முதலான கருத்துகள் தொனிக்கின்றன. அரபு மொழியில் அர்ஷ் எனும் பதம் சிம்மாசனத்தைக் குறிக்கவும் பயன்படுகின்றது. ஆயினும், இவ்வசனங்கள் அல்லாஹ் வுக்கு ஒரு பிரத்தியேக இடத்தை அடையாளப் படுத்துவதாகவோ, ஒரு சிம்மாசனத்தை அவனுக்கான இருப்பிடமாக இனங்காட்டுவதாகவோ இல்லை. முழுப் பிரபஞ்சத்தின் மீதும் அதற்கு அப்பாற்பட்ட ஆத்மீக உலகங்கள் மீதும் வியாபித்திருக்கும் இறையாட்சியையே அவை குறிக்கின்றன. ஏனெனில், அல்லாஹ்வுக்கு இடம் உண்டென்று கூறும்போது, அவனும் வரையறைக்கு உட்பட்டவனாக மாறிவிடும் நிலை ஏற்படுகின்றது. இடம் எனும் வரையறைக்குள் குறுகி விடுவது படைப்பினங்களின் பண்பாகும். படைப்பாளனோ படைப்பினங்களை ஒத்தவனாக இல்லை.

அதேவேளை,''அவனைப் போன்று ஒன்றுமில்லை(42:11),அவனுக்கு நிகராக ஒன்றுமில்லை(112:4) போன்ற வசனங்கள், அல்லாஹ்வின் ஒப்புவமையற்ற உயர் நிலையை சுட்டுவனவாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவன் உருவமற்றவன்

அல்லாஹ்வை கண்களால் காண முடியாது என்பது எமது நம்பிக்கையாகும். ஏனெனில், ஒரு பொருளை கண்களால் காண முடியுமாக இருப்ப தென்பது, குறித்த பொருளுக்கு உருவம், இடம், நிறம், தோற்றம், திசை முதலான பண்புகளை அடையாளப் படுத்தும் சான்றாக அமைகின்றது. இவை சிருஷ்டிகளின் பண்புகளாகும்;. ஆனால் படைப்பாளனாகிய அல்லாஹ்வின் பண்புகளோ, அவனது படைப்புகளின் பண்புகளை விட்டும் முற்றிலும் வேறுபட்டனவும் தெய்வீகத் தன்மை வாய்ந்தனவுமாகும்.

இதன்படி, அல்லாஹ்வைக் கண்களால் காண முடியும் என்று நம்புதலானது  இணைவைப்பில் (ஷிர்க்) எம்மைச் சேர்த்து விடும் அபாயம் கொண்டது.

பார்வைகள் அவனை அடையாது. அவனே பார்வைகளை அடைகின்றான். அவன் நுட்பமானவன். யாவற்றையும் நன்கறிந்தவன். (06:103)

பனூ இஸ்ராயீல்களில் சிலர் நபி மூஸாவிடம் வந்து, ''மூஸாவே! நாம் இறைவனைக் கண்ணால் காண்கின்ற வரை, உம்மை விசுவாசங் கொள்ள மாட்டோம்|(2:55) என்று தர்க்கம் புரிந்தார்கள். மூஸா நபியவர்கள் அக்குழுவினரை அழைத்துக் கொண்டு தூர்சீனா மலைக்குச் சென்று அவர்களது வேண்டுகோள் பற்றி அல்லாஹ்விடம் எடுத்துரைத்தார்கள். அப்போது அல்லாஹ்விடமிருந்து பதில் வந்தது

மூஸாவே! ஒரு போதும் நீர் என்னைப் பார்க்க முடியாது. எனினும் இம்மலையை நீர் பார்ப்பீராக. அது தன்னுடைய இடத்தில் நிலைத்திருந்தால் அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்.||back 1 2 3 4 5 6 7 next