ஷீஆக்களின் வரலாறு01- உதாரணத்திற்கு . ;-

ان االذين آمنوا  وعملوا  الصالحات اولئكهم  خير البريه : سوره البينه

 

நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு சாலிஹான நல்லமல்கள் செய்கின்றார்களோ அவர்கள் தாம் படைப்புக்களில் மிக மேலானவர்கள். 98-7

 

என்ற திருக்குர்ஆன் வசனத்திற்கு பல முபஸ்ஸிரீன்கள், குர்ஆன் விரிவுரையாளர்கள் பின்வருமாறு வியாக் கியாணம் வழங்கியுள்ளனர் :-

 

        இவ்வசனம் அலியின் விடயத்திலும் அலியைப் பற்றும் அலியின் ஷீஆக்களின் விடயத்தில் தான் இறங்கியது. ஏனெனில் மேற்கூறிய வசனம் நபிகளாருக்கு இறங்கிய போது படைப்புக்களில் எல்லாம் மிக சிறந்த படைப்பு யார் என சஹாபாக்கள் வினவ நாயகம் (ஸல்) அவர்கள் அதற்கு அலியும், அலியுடைய ஷீஆக்களும் என்று பதிலுரைத்தார்கள். 

 

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்தையும் அதற்குறிய நபிவாக்கையும் சுயூதி என்ற அஹ்லுஸ் சுன்னத் குர்ஆன் விரிவுரையாளர் தனது துர்ருல் மன்தூர் என்ற ஏட்டிலும்,  இப்னு அஸாகிர் என்பவர் தனது வரலாற்று ஏட்டிலும் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரழி) வாயிலாக நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளார்கள்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 next