ஷீஆக்களின் வரலாறு 

கதீர் கும் என்ற மிக முக்கியமான ஒரு நிகழ்வும் ஹஸரத் அலியின் இன்னு மொரு இமாமத் நியமண நாளாகும். நாயகத்தின் ஹஜ்ஜத்துல் விதாவில் கலந்து கொண்டு தங்களது நாடுகளை நோக்கி திரும்பி க் கொண்டிருந்த ஆயிரக் கணக்கான ஹஜ்ஜாஜிகளை கதீர் கும் என்ற இடத்தில் வர வழைத்து ஒன்று கூட்டி பாலை வனத்தின் உச்ச உஷ்ணத்திற்கு மத்தியில் ஹஸரத் அலியை உலக முஸ்லிம்களுக்கே அறிமுகம் செய்து, அவர்களிடமிருந்து வாக்குறுதிகளைப் பெற்று தனக்குப் பின் அலி தான் உங்களுக்கு வழிகாட்டும் இமாம் என்றும், அவர் தான் எனக்குப் பின் முஸ்லிம் உம்மத்திற்கு கலீபா என்றும் அலியின் கையை உயர்த்தி சுட்டிக்காட்டினார்கள். இத்தினத்தில் தான் சூரத்துல் மாயிதாவின் 67-69 வரையிலான  வசனங்கள்  நபிகளாருக்கு இறக்கப் பட்டது. அவ்வசனங்களில் முதல், நபிகளாரை எச்சரித்து மனிதர் களின் தீங்கிக்காக அஞ்சி ரிஸாலத்தை பூர்த்தி செய்யாமலிருக்க வேண்டாம் என்று கூறி விட்டு நபிகளா ரை அனுதாபித்து, ஆதரித்து மனிதர்களின் தீங்கிலிருந்து உம்மைப் பாதுகாப்போம் என வாக்குறுதி வழ ங்கினான். உடனே நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வித தாமதமுமின்றி அலியினுடைய விலாயத்தை, இமா மத்தை மக்களுக்கு எற்றி வைத்து விட்டு தான் இஸ்லாத்தை பூரணப்படுத்தி விட்ட தாகவும், இறைவனி ன் அருட் கொடைகள் எமக்கு குறைவின்றி கிடைத்து விட்டதெனவும் கூறினார்கள்.

 

ஆதாரம் :- தப்ஸீர் பக்ரு ராஸி  சூரதுல் மாயிதா

மபாதீகுல் கெய்ப் பாக- 12 பக்- 27, 28

 

இம்மாபெரும் நிகழ்வுகளில் நாயகத்தின் கட்டளைக்கு அடிபணிந்து நாயகத்திற்குப் பின் அலியை தங்க ளது இமாமாக ஏற்றுக் கொண்டவர்களைத் தான் ஷீஆக்கள் என்றழைக்கின்றோம். மேற்கூறப் பட்ட  நிகழ்வுகள் ஷீஆவின் தோற்றத்திற்கு போதுமான ஆதாரங்களாகும். 

 

ஷீஆ என்ற சொல் எவ்வாறு தோற்றம் பெற்றது ?  என்று சிலர் வினவலாம். இச் சொல்லை நாயகமே இயம்பி இருக்கையில் நமக்கேன் விவாதம்!! ஷீஆ என்ற வார்த்தையை தனக்குப் பின் அலியைப் பின் பற்றும் முஸ்லிம் உம்மத்திற்கு நாயகம் சூட்டிருப்பது ஆதார பூர்வமான ஒரு விடயம் என்பதால் எவராலும் அதை மறுக்க முடியாது.இவ்விஷயத்தை ஷீஆ,சுன்னி சார்ந்த ஹதீஸ், தப்ஸீர், iலாற்றுக் கிரந்தங்க ளில் தாராளமாக காணலாம்.

 back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 next