ஷீஆக்களின் வரலாறுநபிகளாரின் அருள் வாக்குகளிலும் ஷீஆவுக்கு ஆதாரமுள்ளதென கூறும் அவர்கள் பின் வருமாறு கூறுகின்றனர்.  நாயகம் ஸல் அவர்கள் தனது ஆரம்ப பிரச்சாரத்திலிருந்தே தனக்குப் பின் வரும் இமாமை, வழி காட்டியை, கலீபாவைத் தெரிவு செய்து விட்டார்கள். இக் கூற்றுக்கு தஃவதுல் அஷீரா, அல்லது ஹதீது யவ்முத்தார், அல்லது பத்வுத் தஃவா போன்றவைகளை ஆதாரமாக காண்பிக்கின்றனர்.

 

மேற் கண்ட ஹதீஸ் விடயம் எக்காலத்தைச் சாறுமென்றால் நபி மணி (ஸல்) அவர்கள் தனது இனபந் துக்களை அழைத்து இஸ்லாத்தை எற்றி வைக்க இறைவன் பாலிருந்து கட்டளை பெற்றுக் கொண்டார் களோ அன்றிலிருந்தே தனக்குப் பின்னுள்ள வழிகாட்டியை தெரிவு செய்து விட்டார்கள்.

 

இறை ஏவலின்  பேரில் நாயகத்தின் அழைப்பினால் இனபந்துக்கள் ஒன்று கூட்டப்பட்ட அந்நாளில்  கோமான் நபி தனது இனபந்துக்களை நோக்கி உங்களில் எவர் என்னுடைய இஸ்லாத்தை ஏற்று அதை ஏனையோருக்கு எற்றி வைக்கும் பணியில் எனக்கு துணையாக இருந்து உதவி செய்கின்றாரோ அவரே எனக்குப் பின் முஸ்லிம் உம்மத்திற்கு தலைவராகுவார் என்று இயம்பிய  போது மௌனத்தில் சங்கமித் திருந்த  சபையோருக்கு  மத்தியில்  ஹஸரத்  அலி (அலை) வீரத்துடன் எழுந்து நின்று தனது ஆதரவை நாயகத்திற்கு வழங்கி உதவியும், ஒத்தாசையும் புரிவதாக கூறினார்கள். நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸரத் அலியின் ஆதரவு கொண்ட துணை விவகாரத்தை ஏற்று, ஏய் அலி! நீரே எனக்குப் பின் எனது கலீபா, வஸி, வலி என்று அறிமுகம் செய்தார்கள்.

 

ஆதாரம்

01- தாரீகுத் தபரி பாக-2  பக்- 216

 

02- தப்ஸீருத் தபரி பாக-9  பக்- 74back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 next