ஷீஆக்களின் வரலாறுநாயகம் ஸல் அவர்கள் கொண்டு வந்த இஸ்லாம் அவர்களின் கண்மறைவுக்குப் பின்னும் அதே தூய வடி வத்தில் பாதுகாக்கப்படவேண்டும். அது எஞ்சி இருக்க வேண்டும். என்று குரல் கொடுக்கும் பட்சத்தில் அங்கு தோள் கொடுத்து உதவி செய்ய வருபவர்கள் தான் ஷீயாக்கள்.

 

மேற்கூறப்பட்ட வரைவிலக்கணத்திற்கமைய ஷீயா மத்ஹபின் கோட்பாடு என்னவெனில் இஸ்லாத்தின் இறுதிநாள் வரையான முடிவற்ற வாழ்க்கைக்கு புத்துயிர் கொடுக்க நாயகம் போன்ற தலைவர்கள், வழி காட்டிகள் தோன்ற வேண்டும் என்றும் அத்தலைவர்கள் வழிகாட்டிகள் நாயகம் மூலம் தெரிவு செய்யப் பட்டு விட்டனர் என்றும் கருதுகின்றனர்.

 

இதனால் ஷீஆவை இஸ்லாத்தின் அமுலாக்கப் பிரிவு என்றும் அதனை பின்பற்றுவோரை ஷீயாக்கள் என்றும் கூறுகின்றோம்.

 

எனவே ஷீஆவை புதிதாக இஸ்லாத்தில் உதித்த பிரிவு என்று கருதுவதை விட்டுவிட்டு இஸ்லாத்தை இருதிநாள் வரை பாதுகாத்து கரைசேர்க்க அமைக்கப்பட்ட திட்டம் என்பதே சாலச் சிறந்தது.

 

இவை யாவையும்  நாம் அல்குர்ஆன் அல்ஹதீஸ்களில் தெளிவாக காண்கின்றோம்! ஷீயாக்கள் தன் கூற்றுக்கு ஆதாரமாக குர்ஆனின் சூரதுல் மாயிதாவின் 67,69 வது வசனங்களை முன்வைக்கின்றனர். இவ்வசனங்கள் நாயகத்திற்குப் பின் இஸ்லாத்தை பாதுகாக்க தோன்றும் வழிகாட்டிகளைக் கூறுகின்றது இவ்வாதத்திற்கு பக்க பலமாக அவைகள் இறங்கிய காரணங்களை ஹதீஸ் கிரந்தங்களில் காட்டுகின்ற னர்.  அதே போன்று சூரதுன் நிஸாவின் 59 வது வசனத்தையும் நாயகத்திற்குப் பின் நபிகளாரின் சமுகத்திற்குரிய பொறுப்பதிகாரிகள் என்று அறிமுகம் செய்கின்றனர். 

 back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 next