ஷீஆக்களின் வரலாறுதுரதிஷ்டவசமாக ஷீஆவோடு பகைமையும், குரோதமும் கொண்ட தீயவர்கள் ஷீஆவின் ஸ்தாபகர் அப்துல்லாஹ் இப்னு ஸபா என்றும் ஷீஆக்களை அப்துல்லாஹ் இப்னு ஸபாவை பின்பற்றுபவர்கள் என்றும் தூற்றுகின்றனர். இவர்கள் யதார்த்த கண் கொண்டும், பிடிவாதம், கொள்கை வெறியற்று ஷீஆவை பார்ப்பார்களானால் ஷீஆவுக்கும் அப்துல்லாஹ் இப்னு ஸபாவுக்கும் எவ்வித தொர்புமில்லை என்பதையும், ஷீஆ உலமாக்களின் கருத்தில் அப்துல்லாஹ் இப்னு ஸபா என்ற ஒருவன் இருந்ததி ல்லை எனக் கூறுவதையும் காணலாம்.  

 

சுருங்க கூறின்.

ஷீஆ என்ற சமூகம் அரசியல் தாக்கங்களினாலோ அல்லது கொள்கை விவாத கொந்தளிப்பினாலோ பெற்றெடுக்கப்பட்ட ஒன்றல்ல. மாறாக அன்று நபிகளாரின் சமுகத்தில் வாழ்ந்த முதல் முஸ்லீம்களான அன்சாரிகளிலும் முஹாஜிரீன்களிலும் ஒருவகுப்பினர் நாயகத்தின் கட்டளையின் பேரில் அலியை நாயகத்திற்குப் பின் தங்களது இமாமாக ஏற்று அலியின் கட்டளைக்கு செவிதாழ்த்தி வாழ்ந்தார்கள் அதுதான் ஷீயாவின் தோற்றம் அவர்களின் கருத்தில். நாயகம்(ஸல்) அவர்கள் தனது இறைவனின் கட்டளைப்படி இஸ்லாம் என்ற ஜோதி இறுதிநாள் வரை பாதுகாக்கப்படுவதற்கு அலி 

 

யையும் அலிக்குபின் பதினொரு(11) இமாம்களையும் தனது கலீபாக்களாகவும் தன் சமுகத்தின் இமாம்களாகவும் மக்களுக்கு அறிமுகம் செய்து அவர்களைத் தேர்தெடுக்கும் பொறுப்பை மக்கள் கையில் கொடுத்து மக்களை குழப்ப நிலையில் ஆக்கி விடாமல் தாங்களே தெரிவு செய்துவிட்டு சென்றுள்ளார்கள் என்று நம்புகின்றனர்.

 

இதனாலே தான் ஷீயாக்கள் தங்களது இஸ்லாமிய மார்க்க சட்டங்களையும், தங்களின் அன்றாட வாழ்வுக்குத் தேவையான சகல அறிவியல் விடயங்களையும் அலியிடத்திலிருந்தும் பின்வந்த பதினொரு (11) இமாம்களிடத்திலிருந்தும் பெருகின்றனா. ஏனெனில் நாயகமே அலியைப்பற்றி அரு

 

ளும் போது.நான் அறிவின் பட்டணம் அலி அதன் நுழைவாயில் என்று கூறியுள்ளார்கள். இதனால் ஏனையோர்கள் கொடுக்கும் பத்வாக்கள் ஆதாரமற்றவை என்கின்றனர்.

 

இவ்வாக்கத்தில் குறிப்பிட்டுள்ள பதில் போன்று தெளிவான நபிவாக்குகள் இருந்தும் ஷீயாவை ஒரு சிறிய விடயமாகவோ அல்லது ஒரு யுகமாகவோ கருதுவது மகா தவறு! நபிகளாரின் தெட்டத் தெளிவான ஹதீஸ்களை எவ்வாறு மறுக்க முடியும்! நாயகம் தனக்குப்பின் அஹ்லுல்பைத்தைப் பின்ப

 

ற்ற செல்லி இருக்கையில் ஏன் சிலர் அஹ்லுல்பைத்தல்லாதவர்களின் பக்கம் சென்று அவர்களைப் பின்பற்றுகின்றனர்.

 

ஷீயாக்கள் அஹ்லுல்பைத்தையல்லாது வேறு எவரைப்பின்பற்றுகின்றனர்? உண்மை அஹ்லுல் பைத்தோடு இருக்கையில் ஏன் எவருக்கும் பின்னால் நாம் போகவேண்டும்? இணையத்தின் கட்டுரைப் பகுதிpயில் அஹ்லுல்பைத் சம்பந்தமாக நபிகளாரின் அருள் வாக்குகளை முஸ்லிம் மற்றும் ஏனைய ஐந்து கிரந்தங்களிலுமிருந்து எடுத்துக்காட்டியுள்ளோம். நாயகம் (ஸல்) அவர்கள் தனக்குப்பின் இரு பொக்கிஷங்களான குர்ஆனையும், அஹ்லுல்பைத்தையும் பின்பற்றும்படி வேண்டியுள்ளார்கள். அஹ்லுல்   பைத் என்போர் அலியும், பாத்திமாவும், அலியின் பிள்ளைகளுமாவர்.ஷீயாக்கள் அலியைப் பின்பற்றுகின் றார்கள் என்றால் அது நாயகத்தின் கட்டளையின் பேரிலேதான் இப்படி ஆதார பூர்வமாக அலியைப் பின் பற்றும் ஷீயாக்களை ஏன் சிலர் வசைபடித்திருக்கின்றார்கள்?

 

ஆம் அன்று பனீ உமையாக்கள் அஹ்லுல்பைத்துக்களோடு பகைமை கொண்டிருக்காவிட்டால் இன்றுள்ள வசைகளும் ஊத்தைப்பேச்சுகளும் இருக்க மாட்டாது இன்று சிலர் ஷீயாவை தூற்றுகின்றார்க லென்றால் அன்றைய தனது தாய் தந்தையர்களான பனீ உமையாக்களின் வாழ்க்கை வழி முறைகளை ஹயாத்தாக்குகின்றார் என்பதில் எவ்வித ஐயமில்லை!back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17