ஷீஆக்களின் வரலாறுDeprecated: Function eregi_replace() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 99 Deprecated: Function split() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 103 ஷீஆவின் தோற்றம் எப்போது ? ஷீஆ இஸ்லாத்தில் புதிதாக தோன்றிய ஒரு மத்ஹப் என்று கருதும் சிலரே மேலுள்ள வினாவை எழுப்புவர். வரலாற்றை யதார்த்த கண் கொண்டு பார்க்கும் போதே இவர்களின் ஷீஆவைப் பற்றிய யூகம் தெளிவாகும். எப்போது தோற்றம் பெற்றது என்ற கேள்வியை ஷீயாவை வைத்துக் கேட்காமல் உண்மை யிலேயே இஸ்லாத்தில் புதிதாக தோன்றிய அமைப்புக்களை வைத்து வினவுவது சாலச் சிறந்ததாக இருக்கும். கவாரிஜ், முர்ஜிஆ போன்றவைகள் அரசியல் கொந்தளிப்புகளாலும், கொள்கை கோட்பாடுகளாலும் உருவானவைகள் இவைகளை நோக்கி மேலுள்ள வினா எழுவது நியாயம்தான். மாறாக ஷீயாவை அவ்வாறு வினவுவது சரியல்ல ஏனெனில் ஷீயா இஸ்லாத்தில் புதிதாக தோற்றம் பெற்ற ஒரு அமைப்பு அல்ல. மாறாக ஷீயாவும் சுன்னி போன்று இஸ்லாத்தின் வேரொரு முகமாகும் நன்றாக கூறின் இஸ்லாத்தை ஒரு இரும்பு நாணயமாக கருதினால் அதன் ஒரு பக்கம் சுன்னாவென்றும் மறுபக்கத்தை ஷீயாவென்றும் கருதலாம். ஷீயாவின் உண்மை வடிவத்தை கூறுவதாயின் பின்வறுமாறு கூறலாம். ஷீயா என்பது நபி (ஸல்) அவர்களினால் கொண்டு வரப்பட்ட தெளிவான இஸ்லாம், அவர்களின் கண் மறைவிற்குப் பின்னும் அதன் ஒளி மங்கி மறையக்கூடாது என்பதற்காக அவர்கள் தன்னிகர் போன்ற ஒரு தலைமைத்துவத்தை இஸ்லாத்தை பாதுகாக்க உருவாக்கினார்கள் என்பதை ஆதார பூர்வமாக ஏற்று அத்தலைமைத்துவத்தின் நிழலில் வாழும் ஒரு இஸ்லாமிய சமூகம். ஷீயா என்பது, இஸ்லாத்தை தனது வழியாகக் கொண்டு அதற்கு புத்துயிர் கொடுத்து கியாமத் நாள் வரைக்கும் பாதுகாக்க நாயகத்தால் ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு இமாம் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதாக நம்பிக்கை வைத்துள்ள ஒரு இஸ்லாமிய சமூகம். இன்னும் கூறுவதானால் நாயகத்தின் இஸ்லாம் இறுதி நாள் வரை பாதுகாக்கப்படுமா? என்று அஞ்சும் பட்சத்தில் நாயகம் எம் பயத்தை நீக்கி தனது இஸ்லாமிய பாதுகாவலர்கள் என்று குறிப்பிட்ட சிலரை நியமித்துத் தந்த இஸ்லாத்தை பாதுகாக் கும் திட்டத்தை முன்காட்டி நிற்பவர்கள் தான் ஷீஆக்கள்.
|