தூய்மையாளர்களின் சில சம்பவங்கள்
Deprecated: Function eregi_replace() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 99
Deprecated: Function split() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 103
பாத்திமா ஸஹ்ரா (அலை) பற்றியது .
இவர்கள் ஜமாதுல் அவ்வல் 13ல் ஷஹீதானார்கள் ( இது நபியவர்கள் மரணித்து 75 நாற்களின் பின் மரணித்தார்கள்) என்ற ரிவாயத்தின் படி ஆகும. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'எனது மகளிற்கு நான் பாத்திமா என்ற பெயர் வைத்ததன் காரணம் பாத்திமாவையும் அவர்கள் மீது அன்பு வைத்தவர்களையும் இறைவன் நரக நெருப்பை விட்டும் தூரமாக்கியுள்ளான் என்பதற்காகவேயாகும்'.
(மீசானுல் ஹிக்மா:472)
இமாம் ஸாதிக் (அலை) அறிவிக்கிறார்கள்: 'பாத்திமா (அலை) இறைவனிடத்தில் 9 பெயர்களைக் கொண்டுள்ளார்கள். அவை : பாத்திமா இ சித்தீகாஇ இமுபாரகாஇ தாஹிராஇ சகிய்யாஇ ரழிய்யாஇ மர்ழிய்யாஇ முஹத்ததா இ ஸஹ்ரா என்பவைகளாகும். (மீசானுல் ஹிக்மா:473)
அம்மாரா அறிவிக்கிறார்: ' இமாம் ஸாதிக் (அலை) அவர்களிடமிருந்து கேட்டேன். ஏன் பாத்திமா ஸஹ்ரா (அலை) அவர்களை 'பிரகாசிப்பவர்' என்று பெயரிட்டுள்ளீர்கள்? ' இமாமவர்கள் கூறினார்கள் 'பாத்திமா (அலை) அவர்கள் இறைவனைத் தொழும் வேளை இ அவர்களில் இருந்து வெளிப்பட்ட ஒளியானது வானிலுள்ளவர்களுக்கு ஒளி கொடுத்தது. அது எது போன்றதெனில் வானிலுள்ள நடசத்திரங்கள் பூமியிலுள்ளவர்களுக்கு ஒளி கொடுப்பதைப் போன்றாகும். இதனாலேயே அவ்வாறு பெயரிடப் பட்டுள்ளார்கள் '. (மீசானுல் ஹிக்மா :474)
இவர்கள் தனது தந்தையான நபியவர்களுக்கு மகளாக மட்டுமல்லாது தாயாகவும் இருந்து பணி புரிந்தார்கள்.
இவர்களை நாமும் முன்மாதிரியாகக் கொண்டு எமது பெண்களுக்கும் அன்னாரின் வாழ்வியல் வழிகாட்டல்களைக் கற்றுக் கொடுத்து அதன் படி செயல் புரிந்து ஈருலகிலும் பயனடைவோமாக!
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் தில் ஹஜ் 30ல் இ 1ல் இமாம் ஜவாத் (அலை) அவர்கள் ஸஹீதானார்கள் என்று றிவாயத்துக்கள் கூறுகின்றன. இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இ ஸஹீதாக்கப்பட்டார்கள் பின் அவர்களை ஒருகட்டடிடத்தின் மேல் அந்தசங்கையான இமாமின் உடல் வீசப்பட்டது பின் பறவைகள் அந்த சங்கை மிக்க உடலில் வெயிலின் சூடு சுட்டு விடக்கூடாது என்பதற்காக அவ்வாரே இமாமின் உடலிற்கு மேலே மேகம் போன்று வந்து மறைத்துக் கொண்டன. இந்த இமாமவர்கள்தான் சிறுவயதிலேயே இமாமத்தை அடைந்தார்கள் . அவர்களின் காலத்தில் வாழ்ந்த சிலர் இவர் சிறியவர்தானே இவர் என்ன இமாமாக இறுப்பது என்று ஏலனம் செய்வதற்காக இமாமவர்களிடம் சில பல கேள்விகளைக் கேட்க இமாமவர்களளோ அந்தக் கேள்வியைத் தொட்டு சுமார் ஐம்பது கேள்விகளைக்எ கேட்டார்கள் பின் கேள்வி கேட்டவர்களோ அவ்வாறு அசந்து போய்விட்டார்கள் . இமாமர்களின் ஓர் ஆச்சரியமான சம்பவம் இவர்களின் தந்தை இமாம் ரிழா (அலை) அவர்களின் தோழர் ஒருவர் இமாம் ரிழா அவர்களின் ஸஹாத்தத்திற்கு பின் சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் ஒரு வருடம் சிறையில் இருந்தார் . அந்த ஒரு வருடத்தின் பின்தான் சிறையில் இருந்தவருக்கு ஞாபகம் வந்தது இது இமாம் ஜவாத் (அலை) அவர்களின் இமாமத்திற்குறிய காலம் அல்லவா நான் ஏன் இதை மறந்துவிட்டேன் என்று அந்த நொடியே இமாம் ஜவாத் (அலை) அவர்களிடம் வஸீலாத் தேடி அழைத்தார் அப்போது உடனடியாக இமாம் ஜவாத் ( அலை) அவர்கள் அங்கு உதயமானார்கள் அப்போது இமாமவர்களிடம் சிறையில் இருந்த மனிதர் கேட்டார் இமாமவர்களே! நான் சுமார் ஒரு வருடமாக இந்த சிறையில் இருந்தேன் ஏன் நீங்கள் என்னை விடுவிக்க வரவில்லை என்று வினவினார் . அதற்கு அருமை இமாமவர்கள் கூறினார்கள் இன்றுதான் உங்களுக்கு என் ஞாபகம் வந்தது . அதனால்தான் . பார்த்தீர்களா எங்களின் இமாம்கள் எந்தளவிற்கு விரைவாக அவர்களை நேசிகக்கின்றவர்கள் உதவிக்கு அழைக்கின்றார்கள்போது உதவ வறுகின்றார்கள் என்று இமாம்களை உண்மைக்குன்மையாக நேசிப்போம் கஷ்ட நஷ்டங்கள் வறும்போது அவர்களை இறைவனிடத்தில் முன்னிறுத்தி உதவி தேடுவோம் நிச்சயமாக அவர்கள் உதவிக்கு வறுவார்கள் .
|