ஆன்மீகப் போராட்டமும் அழுகை நிறைந்த சம்பவங்களும்.Deprecated: Function eregi_replace() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 99 Deprecated: Function split() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 103 ஆன்மீகப் போராட்டமும் அழுகை நிறைந்த சம்பவங்களும். 01) இமாம் ஹஸன் (அலை) அர்களின் புதல்வர் காஸிம் அவர்களது பரிதாப மரணம். இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் தமது சகாக்களை ஆசூரா தின இரவு, கூடாரத்துள் ஒன்றுகூட்டி, மிகவும் நீண்ட உருக்கமான உரையொன்றை நிகழ்த்தினார்கள். அதன் சுருக்கம் பின்வருமாறு அமைந்திருந்தது: ' எனது சகாக்களே! உங்களது விடயத்தில் நான் முழுமையான திருப்தியும் சந்தோஷமும் கொண்டிருக்கிறேன். எனது நண்பர்களை திருப்தியும் சந்தோஷமும் கொண்டிருக்கிறேன். எனது நண்பர்களை விடச் சிறந்த நண்பர்களையோ, எனது குடும்பத்தினரை விடச் சிறந்த குடும்பத்தினரையோ நான் காணவில்லை. நான் உங்கள் அனைவருக்கும் சுயமாக சிந்திக்கக் கூடிய சிந்தனைச் சுதந்திரத்தை தந்துவிட்டேன். எனது நண்பர்களே! குடும்பத்தினர்களே! பிள்ளைகளே! உடன்பிறப்புக்களே! உமையாக்கள் இன்று குறிவைத்துள்ளதெல்லாம் என்னை மாத்திரமே. உங்களுடன் எவ்வித பகையோ வெறுப்போ அவர்களுக்கில்லை. ஆகவே உங்களில் எவரேனும் இங்கிருந்து செல்ல விரும்பினால் அவர் தாராளமாக இங்கிருந்து செல்லலாம். இந்த இருளின் அடர்த்தி உங்களுக்கு சாதகமாக இருக்குமென நான் நினைக்கிறேன்.' இமாம் ஹுஸைனின் இக்கூற்றை செவியுற்றதும் அன்பொழுக அவர்களை நோக்கிய நண்பர்கள், இறைத்தூதரின் பேரரே! இத நடக்கக் கூடிய காரியமா? உண்மையினதும, சத்தியத்தினதும் உறைவிடமான தங்களை தனியே விட்டு விட்டு நாங்கள் எவ்வாறு போகமுடியும்?' என்று உருகிய உள்ளத்துடன் உரத்துக் கூறினர். அவர்களது அன்புக் கூற்றில் நெகிழ்ந்து போன இமாம் அவர்கள், கவலை தொனிக்கும் குரலில் ' நாளை நாம் அனைவரும் கொலை செய்யப்பட்டு விடுவோம்.' என்று பகன்றார்கள். ஆனாலும் இவ் அபாயகவமான முன்னறிவித்தல் அவர்களது நண்பர்களில் சந்தோசத்தையன்றி வேறெவ்வித மாற்றங்களையும் உண்டாக்கவில்லை. தமது ஷஹாதத்தை நினைத்து அவர்கள் மகிழ்ச்சியுற்றுத் திளைத்தனர். அச்சந்தர்ப்பத்தில் அங்கிருந்த சிறுவர் ஹாசிம் அவர்கள் இமாம் ஹுஸைன் அவர்களுக்கு முன்னால் வந்தார்கள். இமாம் ஹஸனின் புதல்வரான அவர்கள் தந்தையை இழந்த பிறகு சிறிய தந்தை ஹுஸைனுடனேயே வாழ்ந்து வந்ததனால் அவர்கள் மீது அபரிமிதமான அன்பும் பாசமும் கொண்டிருந்தார்கள். இமாம் ஹுஸைனை நோக்கி ' என் அன்பின் சிறிய தந்தையே! நாளை நானும் கொலை செய்யப் படுவேனா? எனக்கும் ஷஹாதத்தில் கூலி கிடைக்கப் பெறுமா?' என கனிந்து கேட்டார்கள். சிறுவரின் கேள்வியில் உருகிப்போன இமாம் அவர்கள், சிறுவரை நெருங்கி ' மகனே! நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்பேன் அந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொன்னதும் உங்களது கேள்விக்கான பதிலை நான் கூறுகிறேன்' என்று கூறிவிட்டு ' நீங்கள் மரணத்தை எவ்வாறு கருதுகிறீர்கள்?' எனக் கேட்டார்கள். உடனே சிறுவர் ஹாசிம் ' என் சிறிய தந்தையே! மரணம் என்பது எனக்கு தேனைவிடவும் மதுரமானது. எனத்திடமாக பதிலுரைத்தார்கள். சிறுவரின் பதிலைக் கேட்டு நெஞ்சுருகிப் போன இமாமவர்கள், ' மகனே நீங்களும் கொலை செய்யப் படுவீர்கள்' என்று கூறிக் கண்ணீர் உகுத்தார்கள்.தொடர்ந்து கூறினார்கள்; ' மகனே! மற்றவர்கள் உயிர் நீப்பதற்கும் நீங்கள் உயிர் நீப்பதற்கும் அதிக வித்தியாசமுள்ளது. ஏனெனில் நீங்கள் அதிகமான சோதனைக்கு உள்ளாக்கப் படுவீர்கள்.' என்று கூறினார்கள்.
|