உலகளாவிய இஸ்லாமிய ஐக்கியம்Deprecated: Function eregi_replace() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 99 Deprecated: Function split() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 103 உலகளாவிய இஸ்லாமிய ஐக்கியம்
உலகளாவிய இஸ்லாமிய ஐக்கியம் ஒற்றுமை இஸ்லாத்தின் பிரதான தூண்களில் ஒன்று ஆகும் . இக் கருத்து அல்லாஹ்வின் ஏகத்துவ சித்தாந்தத்தில் இருந்து ஊற்றெடுக்கின்றது . புனித அல் குர்ஆன் எப்போதும் நம்பிக்கையாளர்களுக்கு இவ்விறை தத்துவம் பற்றி எச்சரிக்கின்றது . ஆரம்பத்தில் நபி ( ஸல் ) அவர்களின் பரி சுத்தமான வழி காட்டலின் மூலம் முஸ்லிம்கள் ஒற்றுமை என்ற கயிற்றைப் பற்றிப் பிடித்தார்கள் . உலகில் மிக உயர்ந்த கலாசார நாகரீகத்தை கட்டி எழுப்புமளவு சர்வதேச கௌரவத்துக்கு உரியவர்களாகப் பரினாமம் பெற்றார்கள் . எனினும் , பிற்பாடு தமது மார்க்க விரோதச் செயல்களினாலும் , இறை விரோதிகளின் சதி முயற்சிகளின் திணிப்பினாலும் பல் வேறு துண்டங்களாகப் பிளவு பட்டு , பலவீனப் பட்டுப் போய் விட்டார்கள் . வேறு பட்ட இனப் பிரிவினர்களை இணைக்கின்ற காரணிகளில் சமயம் முக்கியமான ஒன்றாகும் . இஸ்லாம் அல்லாஹ்வின் முன்னிலையில் மாந்தர் யாவரும் சமம் என்ற கோட்பாட்டினைக் கொண்டு உள்ளதால் , அது மக்களிடையில் ஐக்கியத்தை ஏற் படுத்தும் சக்தி வாய்ந்த காரணியாக விளங்குகின்றது . அது முஸ்லிம்களினது வாழ்வின் சகல அம்சங்களுக்கும் வழி காட்டுகின்றது . அது வெள்ளையன் , கறுப்பன் என்ற பேதம் காட்டாமல் எல்லோரையும் ஒரே சமூகமாக இணைக்கின்றது . இஸ்லாம் வலியுறுத்துகின்ற சமயம் சார்ந்த அனைத்துக் கடமைகளும் ஒற்றுமையைக் கட்டி எழுப்பும் உயர்ந்த கட்டமைப்பைக் கொண்டு உள்ளமை அவற்றின் பிரதான சிறப்பம்சம் ஆகும் . முஸ்லிம்கள் அவர்களது சகோதரத்துவத்தை வலியுறுத்தும் நாளாந்த ஐந்து நேரத் தொழுகையை கஃபாவை நோக்கித் தொழும் படி கேட்கப் பட்டு உள்ளார்கள் . அவர்கள் இஸ்லாத்தின் நம்பிக்கைக் கோட்பாட்டை மனமறிந்து ஒப்புக் கொள்வதுடன் , தங்களது செல்வத்தின் ஒரு பகுதியை தங்கள் மத்தியில் தேவை உடையோருக்கு ஒதுக்குதல் வேண்டும் என்றும் , வருடத்தின் குறித்த ஒரு மாதத்தில் முழு மாதமும் நோன்பு நோற்றல் வேண்டும் என்றும் , வசதி படைத்தவர் தம் வாழ்வில் ஒரு முறையாவது ஹஜ் யாத்திரை மேற் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டு உள்ளார்கள் . மக்கள் , உலகின் பல பகுதிகளிலும் இருந்த வந்து ஹஜ்ஜில் ஒன்று கூடுவது சகோதரத்துவ உணர்வை வலுவடையச் செய்கின்றது . இது , நூற்றாண்டு காலமாக முஸ்லிம் சமூகங்களின் பிரதான இணைப்புப் பாலமாக உள்ளது .
|