முஹர்ரம் கர்பலா
Deprecated: Function eregi_replace() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 99

Deprecated: Function split() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 103

முஹர்ரம் கர்பலா

 

 

 

 

முஹர்ரம் கர்பலா

 

01. முஹர்ரம் இரண்டாம் நாள் இமாமின் கர்பலா வருகை

 

புனித மக்காவிலிருந்து மதீனாவுக்கும் அங்கிருந்து ஈராக்கிற்கும் வந்த இமாம் ஹுஸைன் அவர்கள் , ஹிஜ்ரி 60ம் ஆண்டு முஹர்ரம் இரண்டாம் நாள் கர்பலாப் பூமியை வந்தடைகிறார்கள் . இங்கு வாழ்ந்து கொண்டு இருந்த ஒரு கூட்டத்தினரிடம் , இவ்விடத்தின் பெயர் என்ன ? என வினவிய போது , இது ' ஸத்துல் புராத் ' என்றனர் . இதற்கு வேறு பெயரும் உண்டா ? என வினவிய போது , ' கர்பலா ' என்றனர் . அங்கு ஒரு பிடி மண்ணை அள்ளி நுகர்ந்தார்கள் இமாம் ஹுஸைன் அவர்கள் . இது ஒரு வகை மணம் கமழும் பூமி . இதுதான் என் பாட்டனார் ( ஸல் ) அவர்கள் வாக்களித்த பிரதேசம் எனக் கூறி , அவ் இடத்தை தமது அமைவிடம் ஆக்கிக் கொண்டார்கள் .

இமாமின் வருகை பற்றி முன்னமே அறிந்து இருந்த யஸீத் , இமாமை வழி மறித்துத் தடுக்க , ஹுர் இப்னு  யஸீத் அர் ரியாகி என்பவரின் தலைமையில்  ஒரு படையை அனுப்பி வைத்து இருந்தான் . கவர்னர் உபைதுல்லாஹ் இப்னு ஸியாதிற்கு  இமாமின்  வருகை பற்றிய  செய்தியை ஹுர் அறிவித்து விட்டார் .1 2 3 next