நஹ்ஜுல் பலாகாDeprecated: Function eregi_replace() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 99 Deprecated: Function split() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 103 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். நூல் அறிமுகம் ஸயீத் ராஸி எனபவரால் தொகுக்கப்பட்டு ' நஹ்ஜுல் பலாகா ' என நாமமிடப்பட்டுள்ள இந் நூல் ஹஸ்ரத் அலி ( அலை ) அவர்களது நல்லுபதேசங்கள் , போதனைகள் , கடிதங்கள் ஆணைகள் மற்றும் சில பொன்மொழிகள் என்பவற்றின் மொழிபெயர்ப்பாகும். ஹஸரத் அலி ( அலை ) அவர்களது இந்த நல்லுபதேசங்களும் போதனைகளும் இஸ்லாமிய உலகின் மிகப் பெறுமதி மிக்கதாகவும் பெரும் மதிப்புக்கு உரியதாகவும் கருதப்படுகின்றது . அன்னாரின் மறைவின் பின்னர் ஒரு நூற்றாண்டுக்குள் அவை , ஏகத்துவ தத்துவங்களின் இறுதி வாக்கியமாகவும் , சிறந்த குண இயல்புகளை உருவாக்கும் சொற் பொழிவுகளாகவும் உளத் தூண்டலுக்கு உந்து சக்தியாகவும் பக்தி மார்க்கத்துக்கான தூண்டுதலை அளிக்கும் நல்லுபதேசங்களாகவும் உண்மை நியாயம் என்பவற்றுக்கான வழிகாட்டும் ஒளி விளக்காகவும் இறை தூதர் ( ஸல் ) அவர்களையும் புனித குர்ஆனையும் புகழ்ந்துறைக்கும் பொக்கிஷங்களாகவும் இஸ்லாமிய ஆன்மீக மாண்புகளின் தெளிவான விளக்கங்களாகவும் இறைவனின் நற்பண்புகள் பற்றிய பயபக்தியை தூண்டும் கலந்துரையாடலாகவும் உன்னதமான இலக்கியமாகவும் சொல் இலக்கணவியலின் மாதிரியாகவும் கொள்ளப்பட்டு கற்பிக்கப்பட்டும் , வாசிக்கப்பட்டும் வருகின்றது . 01 ) ஆஃஹிரத ; 1. மனிதர்களே ! நிச்சயமாக இவ்வுலகம் அழிந்து விடுவதுளூ மறுவுலகமே நிலையானது எனவே , உங்களது அழிந்து விடுவதிலிருந்து உங்களது நிலையானதற்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள் . உங்களது இரகசியங்களை அறிந்தவர்களிடத்தில் உங்களது திரைகளைக் கிழித்துவிடாதீர்கள் . 2. தன் மறுமை விடயங்களை சீர்செய்து கொள்பவருக்கு, அவருடய இம்மை விடயங்களை அல்லாஹ் சீர் செய்து கொடுக்கின்றான் . 3. எவர் மறுமையைத் தேடுகின்றாரோ, அவர் இவ்வுலகத்திலிருந்து முழுமையாக எடுத்துக் கொள்ளும் வரை அது அவரைத் தேடிக் கொண்டிருக்கும் . 4. ( உலகில் வாழுகின்ற ) முதற்கட்ட வாழ்வை அவதானித்துக் கொண்டே, ( மறுமையில் வாழுகின்ற ) அடுத்த கட்ட வாழ்வை நிராகிப்பவர்களைப் பார்த்து நான் வியப்புகின்றேன் . அவ்வாறே , அழிந்து போகும் இவ்வுலக வாழ்வை நிர்மாணிப்பவர்களையும் நிரந்தரமான மறுமை வாழ்வை புறக்கணிப்பவர்களையும் பார்த்து நான் வியம்புகின்றேன் . 5. தனக்கு உபதேசம் புரியுமாறு கேட்ட ஒரு மனிதருக்கு இமாம் அலி ( அலை ) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் : ளூ அமல் தவிர்ந்த ஏனையவற்றின் மூலம் மறுமையை தேடுவோனாக நீ இராதே ளூ
|